 |
ராமச்சந்திரன் உஷா
இரண்டரை வருடத்திற்கு முன்பு, முரசு அஞ்சலின் துணையுடன், இணையத்தில் தமிழ் எழுதப் பயின்ற உஷா, இன்று அச்சு பத்திரிக்கைகளிலும் எழுத ஆரம்பித்துள்ளார். துபாய்க்கு அருகில் உள்ள புஃஜெய்ரா என்ற சிற்றூரில் வசித்தாலும் பல ஊர்கள், நாடுகள் என்று போயிருப்பதால், பல்வேறு விதமான மனிதர்கள், அவர்களின் உணர்வுகள் இவற்றை நேரடியாக அறியும் வாய்ப்புப் பெற்றவர். அவற்றை மெல்லிய நகைச்சுவை இழையோட கதைகளில் சொல்ல முற்படுகிறார். |
Permalink | 0 comments | 0 trackbacks | Post Comment |
 |
நிலா
லண்டனில் மென்பொருள் தர உறுதி ஆலோசக ராகப் பணியாற்றி வரும் முதுநிலைப் பொறியியல் பட்டதாரி. நிலாச்சாரல் என்ற மின்னிதழைத் துவக்கி கடந்த நான்காண்டுகளாக நடத்தி வருகிறார்.இதுவரை3000 படைப்புக்களுடன்196 நிலாச் சாரல் இதழ்கள் வெளியாகி உள்ளன. நிலா என்ற நிர்மலா இதுவரை சுமார் 30 சிறுகதைகளும் ஒரு குறுநாவலும் எழுதியிருக்கிறார். அரிதாய் கவிதை எழுதுவதுண்டு. நிறப்பிரிகை என்ற குறும்படம் ஒன்று இயக்கி இருக்கிறார். இவ்வளவு சாதனைகள் செய்துள்ள நிலா, பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் மம்சாபுரம் என்ற பட்டிக்காட்டில்தான் |
Permalink | 0 comments | 0 trackbacks | Post Comment |