|
|
 |
பத்மா அர்விந்த்
தற்போது நியூஜெர்சியில் வசித்துவரும் பத்மா பிறந்ததும் அடிப்படைக் கல்வி கற்றதும் கும்பகோணத்தில். சிறு வயதில் திருக்குறள் போட்டிக்காக தமிழ் படிக்க ப்ன் அதுவே ஆர்வமாய் மாறியது. பத்மாவின் முதல் கதை ஆனந்தவிகடனில் வெளியானது.ஜிப்மரில் மருத்துவ உயிர் வேதியியல் படித்துப் பின்அகில இந்திய மருத்துவ அறிவியல் நிலையத்தில் ஆராய்ச்சி (PhD) செய்து கொண்டிருந்தபோது கவனம் அறிவி
யல் பக்கம் த்சைமாறியது. அமெரிக்காவில் உள்ள Cornell medical schoolல் குடலில் வரும் புற்றுநோய்க்கான ஜீன் முறை மருத்துவத்தில் ஆரய்ச்சி செய்து கொண்டிருந்த போது திருமணமானது. ஆய்வைத் துறந்து, வணிக மேலாண்மையில் (MBA) பட்டம் பெற்றார். Young scientist award from India, Mike Friedmanஒs Best Investigator award from Cornell ஆகிய விருதுகளை அறிவியல், மருத்துவம் ஆகியவற்றில் ஆற்றிய பணிகளுக்காகப் பெற்றுள்ளார். தற்போது பொது நலத்துறையிலும்(MPH) பட்டம் பெற்று, அரசு அங்கீகாரம் பெற்ற திட்டமிடுபவராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். கணவனால் அல்லலுறும் இந்திய பெண்களுக்கு அவர்களின் சட்ட பூர்வமான உரிமைகளை சொல்வது, பாலியல் வன்முறை களுக்குள்ளாகும் பெண்களுக்கு ஆலோசனை அளிப்பது போன்ற பணிகளிலும் தன்னார்வ தொண்டராய் ஈடுபட்டுள்ளார் |
Permalink | 0 comments | 0 trackbacks | Post Comment |
 |
திலகபாமா
ஐந்து கவிதைத்தொகுதிகளும் ஒரு சிறுகதைத் தொகுதியும் வெளியிட்டுள்ள திலகபாமா, சிவகாசியில் பாரதி இலக்கிய சங்கம் என்ற அமைப்பை நிறுவி நடத்தி வருகிறார். தமிழ் புதுக்கவிதையை வேர் கொள்ளச் செய்த முன்னோடிகளில் ஒருவரான சி.கனகசபாபதியின் கட்டுரைகள் நூலாக வெளிவரவும் இவர் ஆற்றிய பணிகள் பாராட்டிற்குரியவை. புஷ்கின் இலக்கிய சங்கம் நடத்திய போட்டி, மரத்தடி நடத்திய போட்டி,கவிதை உறவு நடத்திய போட்டி எனப் பல பரிசுகள் வென்றவர். மருத்துவமனை நிர்வாகியாகக் கடமையாற்றுகிறார். |
Permalink | 0 comments | 0 trackbacks | Post Comment |
 |
செல்வநாயகி
வழக்கறிஞர். கணவரின் பணிநிமித்தமாக இப்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். ஈரோடு மாவட்டத்தில் பள்ளிப்படிப்பில் ஈடுபட்டிருந்த காலத்திலிருந்து மாநில அளவிலான முதற்பரிசு உட்படப் பேச்சுப்போட்டிகளில் பல முதற்பரிசுகள் வென்றவர். தமிழகத்தில் பட்டிமன்றம், இலக்கிய மேடைகள், தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றில் பேச்சாளராகப் பங்கேற்றவர். அமெரிக்கா வந்தபின் இணையத் தமிழோடு ஏற்பட்ட தொடர்பில் எழுத ஆரம்பித்து ஒருவருடமாக "மரத்தடி"யிலும், "திண்ணை", "தோழியர் வலைப்பதிவு" ஆகியவற்றிலும் எழுதிக் கொண்டிருக்கிறார். |
Permalink | 0 comments | 1 trackback | Post Comment |
 |
கற்பகம் இளங்கோவன்
முதல் வகுப்பில் பட்டதாரியாக தேறியிருந்த கற்பகத்தைக் கதாசிரியராக மாற்றியவர். ரஜனிகாந்த்! 'வள்ளி'படத்தின் தொடர்ச்சியைக் எப்படி இருக்க வேண்டும் எனக் கதை வடிவில் எழுதும் போட்டியில் முப்பத்தைந் தாயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை முதல் பரிசாகப் பெற்றவர். போட்டிக்கு வந்த 15000 கதைகளில் இவரது கதையை முதல்பரிசுக்குத் தேர்ந்தெடுத்தவர் ரஜினி. "தொடர்ந்து மனவலிமையுள்ள துணிவான பெண்களைப் பற்றிய கதைகளை எழுது" என்பது அப்போது ரஜினி கொடுத்த அட்வைஸ். கற்பகம் இப்போது அமெரிக்காவில் வசிக்கிறார். உயிரெழுத்து குழுவின் மட்டுறுத்துநர். |
Permalink | 0 comments | 0 trackbacks | Post Comment |
 |
கவிநயா
அமெரிக்காவில் உள்ள ரிச்மண்டில் கணிப்பொறியாளராகப் பணியாற்றிவருகிறார்.கல்லூரி நாட்களிலிருந்து எழுதி வரும் கவிநயாவின் இயற்பெயர் மீனா வீரப்பன்.பல சமயங்களில் சில உணர்வுகள் தீவிரமாகும்போது கவிதையாக உருவெடுக்கும் எனத் தன் கவிதைகள் பற்றிக் குறிப்பிடும் கவிநயா வெகு சமீபமாகத்தான் கதைகள் எழுதவும் துவங்கியுள்ளார். படிக்கப் பிடித்தவர்களில் முதன்மையானவர்கள் எனக் குறிப்பிடுவது பாரதியையும், கல்கியையும் |
Permalink | 0 comments | 0 trackbacks | Post Comment |
 |
ஆனந்தி
இருபதாண்டுகளாகக் கவிதைகள் எழுதி வருகிறார்.அறிமுகம், அன்புள்ள உனக்கு, இன்னும் கொஞ்சம் தூரம், உலகை ஒரு பூவாக்கி, இது உனக்கு, நீ நான் மற்றும் நிலா, தானாய்க் கழிந்தது பொழுது எனப் பல தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன். பல விருதுகளும் பெற்றவர். |
Permalink | 0 comments | 0 trackbacks | Post Comment |
 |
அருணா ஸ்ரீநிவாசன்
அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர். டைம்ஸ் ஆஃப்இந்தியா, எகனாமிக் டைம்ஸ், யூ போன்ற ஆங்கில இதழ்களிலும், குமுதம், கல்கி, குங்குமம், தமிழ்முரசு போன்ற தமிழ் இதழ்களிலும் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். குடியரசுத்தலைவர் அப்துல்கலாமிலிருந்து, கூடையில் காய்கறி விற்கும் பெண் வரை பலதரப்பட்ட, பலவகைப்பட்டமக்களை பேட்டி கண்டு அவர்களது எண்ணங்களை நேரடியாக அறியும் அனுபவமும் வாய்ப்பும் பெற்றவர். தற்போது வலைப்பதிவுகள் பதிவதிலும், ஆங்கிலத்தில் நாவல் ஒன்று எழுதுவதிலும் முனைப்பாக இருக்கிறார். |
Permalink | 0 comments | 0 trackbacks | Post Comment |
 |
ஜெயந்தி சங்கர்
சங்கம் வளர்த்த மதுரையில் பிறந்தவர் என்றாலும் ஏழாவது வகுப்புடன் தமிழ் படிப்பைக் கைவிட வேண்டிவந்தது.காரணம் அப்பாவின் வேலை நிமித்தம் இந்தியாவெங்கும் மாறி மாறிப் போய் படிக்க வேண்டிய நிலைமை. சுமார் 14 வருடங்களாக இல்லத்தரசியாகச் சிங்கப்பூரில் வசிக்கிறார். சிறுவயதில் கதைப்புத்தகங்கள் படிக்க முடியாத ஏக்கம் காரணமாக சிங்கப்பூர் வந்த பின் கையில் கிடைத்ததையெல்லாம் படிக்க ஆரம்பித்தார். சிறிது நாட்களில் தேர்ந்த எழுத்துக்களை இனம் கண்டு படிக்க முடிந்தது. அதன் நீட்சியாக எழுத்துத் துவங்கியது.ஏழாண்டுகளுக்கு முன்பு சிங்கை இதழ்களில் எழுத ஆரம்பித்தவர், பின் மின்னிதழ்களில் தொடர்ந்தார். கடந்த ஐந்தாறு மாதங்களாக தமிழகத்தின் பிரபலஇதழ்களில் படைப்புகள் வரத் துவங்கியுள்ளன. |
Permalink | 0 comments | 0 trackbacks | Post Comment |
|
| < |
2009 |
> |
| < |
November |
> |
| |
|
|
|
|
|
1 |
| 2 |
3 |
4 |
5 |
6 |
7 |
8 |
| 9 |
10 |
11 |
12 |
13 |
14 |
15 |
| 16 |
17 |
18 |
19 |
20 |
21 |
22 |
| 23 |
24 |
25 |
26 |
27 |
28 |
29 |
| 30 |
|
|
|
|
|
|
| M |
T |
W |
T |
F |
S |
S |
Show Recent Entries
|