
ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்
இலங்கையைச் சேர்ந்த மூத்த எழுத்தாளர். இங்கிலாந்தில் முப்பதாண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார். லண்டன் பிலிம் இன்ஸ்டிட்யூடில் படித்தவர். இங்கிலாந்து அரசின் மருத்துவத் துறையில் பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றவர். ஏராளமான நூல்கள் எழுதியிருப்பதோடு, குறும்படங்களும் எழுதி இயக்கியிருக்கிறார். அண்மைக்காலமாக மருத்துவ விஷயங்களை சாதாரண மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் நோக்கில் அவற்றைக் குறித்து தமிழில் எழுத முற்பட்டிருக்கிறார். இடதுசாரிச் சிந்தனைகள் கொண்ட இவர், இலக்கியம் தவிர, பெண்ணியம், திரைப்படம், பெண்கள் குழந்தைகளின் உடல் நலம், இங்கிலாந்து அரசியல் இவற்றில் ஆர்வத்தோடு களமிறங்கிப் பணியாற்றிவருபவரும் கூட. பெண்கள் எழுத்தை ஊக்குவிக்கும் நோக்கில் ஆண்டுதோறும், விமர்சகர் கோவை ஞானியுடன் இணைந்து ஒரு சிறுகதைப் போட்டியும் நடத்தி வருகிறார்.
Tags: No tags specified yet.
|