
ரமா சங்கரன்
தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் எழுதும் பத்திரிகையாளர். சிங்கப்பூர் நாளிதழ் தமிழ்முரசு, வானொலி ஒலி, கவிமாலைக் குழு ஆகியவை மூலம் தன் கவிதைகளைப் பகிர்ந்து கொண்டவர். சமாச்சார் இணைய தளத்தில் எழுதும் பத்திகள் (column) முலம் தன் எண்ணங்களை முன் வைப்பவர். எழுத்துப்பணிகளுக்கு நிகராக களப்பணிகளும் செய்து வருபவர். மகாகவி மின் மண்டபத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளராக அவர் ஆற்றியுள்ள பணிகளும் அளித்துள்ள பங்களிப்பும் மிக முக்கியமானவை. இன்று திசைகளை நீங்கள் மின்வெளியில் வாசித்துக் கொண்டிருப்பதற்கும் அவர் அளித்துள்ள ஆதரவுதான் அடிப்படையானது. சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கம் வழங்கி வரும் தமிழ்வேள் விருதுக்காக ஆண்டு தோறும் ஐந்து சவரன்களை அளித்து வருகிறார்.
Tags: No tags specified yet.
|