|
|
 |
லதா
சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழில் கட்டுரைப்பகுதி ஆசிரியராகக் (Features editor) கடமை ஆற்றுகிறார். சிங்கப்பூரில் நன்கு அறியப்பட்ட முன்னணிக் கவிஞர். இரண்டு கவிதைத் தொகுதிகள் வந்துள்ளன. சிறுகதைகளும் நிறைய எழுதியுள்ளார். படைப்பிலக்கியம் தவிர கட்டுரைகள், பேட்டிகள் எனப் பலதுறைகளிலும் கவனம் செலுத்தி வருபவர். |
Permalink | 4 comments | 0 trackbacks | Post Comment |
 |
ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்
இலங்கையைச் சேர்ந்த மூத்த எழுத்தாளர். இங்கிலாந்தில் முப்பதாண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார். லண்டன் பிலிம் இன்ஸ்டிட்யூடில் படித்தவர். இங்கிலாந்து அரசின் மருத்துவத் துறையில் பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றவர். ஏராளமான நூல்கள் எழுதியிருப்பதோடு, குறும்படங்களும் எழுதி இயக்கியிருக்கிறார். அண்மைக்காலமாக மருத்துவ விஷயங்களை சாதாரண மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் நோக்கில் அவற்றைக் குறித்து தமிழில் எழுத முற்பட்டிருக்கிறார். இடதுசாரிச் சிந்தனைகள் கொண்ட இவர், இலக்கியம் தவிர, பெண்ணியம், திரைப்படம், பெண்கள் குழந்தைகளின் உடல் நலம், இங்கிலாந்து அரசியல் இவற்றில் ஆர்வத்தோடு களமிறங்கிப் பணியாற்றிவருபவரும் கூட. பெண்கள் எழுத்தை ஊக்குவிக்கும் நோக்கில் ஆண்டுதோறும், விமர்சகர் கோவை ஞானியுடன் இணைந்து ஒரு சிறுகதைப் போட்டியும் நடத்தி வருகிறார். |
Permalink | 1 comment | 0 trackbacks | Post Comment |
 |
ரஜினி பெத்துராஜா
இதுவரை ஏழு நூல்களை வெளியிட்டுள்ள ரஜினி, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் பரிசு, இங்கிலாந்து, அமெரிக்க நாடுகளின் பயகிராபிகல் சென்டர்கள் வழங்கிய சாதனைப் பெண்கள் விருது, ராஜம், தமிழ்நேயம் ஆகிய இதழ்கள் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பரிசு எனப் பல சிறப்புக்களைப் பெற்றவர். குழந்தை இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர். |
Permalink | 0 comments | 0 trackbacks | Post Comment |
 |
ரமா சங்கரன்
தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் எழுதும் பத்திரிகையாளர். சிங்கப்பூர் நாளிதழ் தமிழ்முரசு, வானொலி ஒலி, கவிமாலைக் குழு ஆகியவை மூலம் தன் கவிதைகளைப் பகிர்ந்து கொண்டவர். சமாச்சார் இணைய தளத்தில் எழுதும் பத்திகள் (column) முலம் தன் எண்ணங்களை முன் வைப்பவர். எழுத்துப்பணிகளுக்கு நிகராக களப்பணிகளும் செய்து வருபவர். மகாகவி மின் மண்டபத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளராக அவர் ஆற்றியுள்ள பணிகளும் அளித்துள்ள பங்களிப்பும் மிக முக்கியமானவை. இன்று திசைகளை நீங்கள் மின்வெளியில் வாசித்துக் கொண்டிருப்பதற்கும் அவர் அளித்துள்ள ஆதரவுதான் அடிப்படையானது. சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கம் வழங்கி வரும் தமிழ்வேள் விருதுக்காக ஆண்டு தோறும் ஐந்து சவரன்களை அளித்து வருகிறார். |
Permalink | 0 comments | 0 trackbacks | Post Comment |
 |
மதுமிதா
கல்கி போன்ற வார இதழ்களிலும், படித்துறை போன்ற இலக்கிய இதழ்களிலும், பல மின்னிதழ் களிலும் எழுதி வருபவர். மெளனமாய் உன் முன்னே என்ற கவிதை நூல் வெளியாகி உள்ளது. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, சமஸ்கிருதம் எனப் பல மொழிகள் அறிந்தவர். பத்ருஹரியின் நீதி சதகத்தைத் தமிழாக்கம் செய்து வெளியிட்டிருக் கிறார். இப்போது வைராக்கிய, சிருங்கார சதகங்களை மொழி பெயர்த்து வருகிறார். |
Permalink | 0 comments | 0 trackbacks | Post Comment |
 |
புதியமாதவி
மும்பையில், ஒரு பன்னாட்டு வங்கியில் 22 ஆண்டுகள் பணி செய்துவிட்டு 2004ல் விருப்ப ஓய்வு பெற்றுள்ளவர். சூரியப் பயணம், ஹேராம் என்ற இரண்டு கவிதைநூல்கள் வெளி வந்துள்ளன. இரண்டு குறுநாவல்கள் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், அரசியல், சமுதாயக் கட்டுரைகள், நூல் விமர்சனங்கள் எழுதியிருக்கிறார். மும்பையிலிருந்து வெளிவரும் தமிழ் வார இதழ் "தமிழ் போஸ்ட்"ன் துணையாசிரியர். பெண்ணியம் பற்றி ஆய்வு செய்வதில் ஆர்வம் உள்ளவர்.
|
Permalink | 0 comments | 0 trackbacks | Post Comment |
 |
பவித்ரா ஸ்ரீநிவாசன்
தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் எழுதும் வணிகவியல் பட்டதாரி. பயணம், புகைப்படம், ஓவியம் ஆகியவை பிற ஆர்வங்கள். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களுக்குச் சென்று அதைக் குறித்துக் கட்டுரைகள் எழுதியிருப்பவர். கல்கியின் சிவகாமியின் சபதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். |
Permalink | 0 comments | 0 trackbacks | Post Comment |
|
| < |
2009 |
> |
| < |
October |
> |
| |
|
|
1 |
2 |
3 |
4 |
| 5 |
6 |
7 |
8 |
9 |
10 |
11 |
| 12 |
13 |
14 |
15 |
16 |
17 |
18 |
| 19 |
20 |
21 |
22 |
23 |
24 |
25 |
| 26 |
27 |
28 |
29 |
30 |
31 |
|
| M |
T |
W |
T |
F |
S |
S |
Show Recent Entries
|